“பணி சிறக்க வாழ்த்துகள்” - அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ்ஸுக்கு அன்புமணி வாழ்த்து

அன்புமணி, இபிஎஸ் | கோப்புப் படங்கள்
அன்புமணி, இபிஎஸ் | கோப்புப் படங்கள்
Updated on
1 min read

சென்னை: அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டத்தில் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். புதிய பொறுப்பில் அவரது பணி சிறக்க வாழ்த்துகள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, அடிப்படை உறுப்பினர்கள் அனைவராலும் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அக்கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in