Published : 27 Mar 2023 04:41 PM
Last Updated : 27 Mar 2023 04:41 PM

சென்னை மாநகராட்சி பட்ஜெட் 2023 அம்சங்கள்: 2 டயாலிசிஸ் மையங்கள், சுய உதவி குழுக்களுடன் ‘மஞ்சப்பை’ திட்டம்

மீண்டும் மஞ்சப்பை | கோப்புப் படம்

சென்னை: சென்னையில் மக்களுக்கு ஏற்படும் நோய் நிலையை மதிப்பிடுவதற்காக நோய் கண்காணிப்பு பிரிவு ஏற்படுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்துள்ளார். சென்னை மாநகராட்சியின் 2023 - 2024 ஆண்டுக்கான பட்ஜெட்டை மேயர் பிரியா ராஜன் தாக்கல் செய்தார். இதில் சுகாதாரத் துறைக்கு 8 திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. இதன் விவரம்:

> சுகாதாரத் துறையின் கீழ் பணிபுரியும் NULM தற்காலிக தொழிலாளர்களுக்கு நலப்பொருட்களும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மழைக்கவச உடை (Raincoat) மற்றும் பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படும். இதற்காக ரூ.18.75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> சுகாதாரத் துறையின் கீழ் நடத்தப்படும் மருத்துவ முகாம்களுக்கு அனைத்து கோட்டங்களுக்கும் கூடாரம், மேஜை மற்றும் நாற்காலி வாடகை முறையில் அமர்த்தி கொள்ள ரூ.45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து மண்டலம் வாரியாக தேவையின்படி பகிர்ந்து அளிக்கப்படும்.

> கொசு ஒழிப்பு மற்றும் கொசுப்புழு தடுப்புப் பணிகளைச் செய்யும் அனைத்துத் தொழிலாளர்களுக்கும், ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் தரமான Vector Control Kit கொள்முதல் செய்து வழங்கப்படும்.

> சென்னை மாநகரில் சுற்றித் திரியும் நாய்களை பிடிப்பதற்கு 6 புதிய வாகனங்கள், ரூ.60 லட்சம் மதிப்பீட்டிலும், மாடுகளை பிடிப்பதற்கு 5 புதிய வாகனங்கள், ரூ.1.35 கோடி மதிப்பீட்டிலும் கொள்முதல் செய்யப்பட்டு உபயோகத்திற்கு கொண்டு வரப்படும்.

> மக்களுக்கு ஏற்படும் நோய் நிலையை மதிப்பிடுவதற்காக தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் (Communicable Disease Hospital) சென்னை மாநகரின் கண்காணிப்பு பிரிவு ஏற்படுத்தப்படும்.

> 2023-2024ம் ஆண்டில் இந்த ஆண்டு, 5 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தர அங்கீகாரச் சான்றிதழ்கள், National Quality Assurance Standards (NQAS) என்ற நிறுவனத்திடமிருந்து பெற்று தரப்படும்.

> 2023-2024-ஆம் நிதியாண்டில், ஷெனாய் நகர் மற்றும் ஆலந்தூர் ஆகிய மண்டலங்களில், ரூ.1 கோடி மதிப்பில் இரண்டு டயாலிசிஸ் மையங்கள் முதற்கட்டமாக 10 இயந்திரங்களுடன் நிறுவப்படும்.

> ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி மீதான தடை அமலாக்கத்தை தீவிரப்படுத்தும் வகையில், பெருநகர சென்னை மாநகராட்சி சோதனை அடிப்படையில் “மஞ்சப்பை” வழங்கும் திட்டம், சுயஉதவி குழுக்களுடன் இணைந்து செயல்படுத்தப்படும். பொது மக்களின் வரவேற்பு மற்றும் கருத்துகளின் அடிப்படையில் இத்திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும். வாசிக்க | சென்னை மாநகராட்சி பட்ஜெட் 2023-ல் கல்விக்கு 27 அறிவிப்புகள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x