சென்னை மாநகராட்சி பட்ஜெட் 2023 - நிதி பற்றாக்குறை ரூ.334 கோடி; கடனுக்கான வட்டி ரூ.148 கோடி

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை | கோப்புப் படம்
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் ரூ.334 கோடி நிதி பற்றாக்குறை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கடனுக்கான வட்டியாக மட்டும் ரூ.148 கோடி செலுத்தப்படுகிறது.

சென்னை மாநகராட்சியின் 2023 - 2024 ஆண்டுக்கான பட்ஜெட்டை மேயர் பிரியா ராஜன் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து வரி விதிப்பு மற்றும் நிதி நிலைக்குழு தலைவர் சர்ப ஜெயதாஸ் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த அறிக்கையில் 2023-2024-ம் நிதியாண்டின் வருவாய் தலைப்பில் வரவு ரூ.4,131.70 கோடியாகவும், வருவாய் செலவினம் ரூ.4466.29 கோடியாகவும், மூலதன வரவு ரூ.3554.50 கோடியாகவும், மூலதனச் செலவு ரூ.3554.50 கோடியாகவும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை மாநகராட்சி ரூ.334 கோடி நிதி பற்றாக்குறையில் இருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறை ரூ.788 கோடியாக இருந்தது. திருத்திய திட்ட மதிப்பீட்டில் இது ரூ.517 கோடியாக உள்ளது. சொத்து வரி உயர்வு காரணமாக சென்னை மாநகராட்சியின் நிதி பற்றாக்குறை குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி மூலம் ரூ.1680 கோடி, தொழில் வரி மூலம் ரூ.500 கோடி, முத்திரைத் தாள் மீதான கூடுதல் வரி மூலம் ரூ.250, மாநில நிதிக்குழு மானியம் மூலம் ரூ.850 கோடி, இதர வகையில் ரூ.822.39 கோடி வருவாய் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

பணியாளர் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்கு ரூ.1,939.98 கோடி, நிர்வாகச் செலவு ரூ.231.72, பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்பு பணி செலவு ரூ.1434.06 கோடி, கடனுக்கான வட்டி ரூ.148.82 கோடி உள்ளிட்டவை முக்கிய செலவுகளாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. | வாசிக்க > பிளஸ் 2 பாடங்களில் சென்டம் எடுத்தால் ரூ.10,000 - சென்னை மாநகராட்சி பட்ஜெட் 2023-ல் கல்விக்கு 27 அறிவிப்புகள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in