Published : 10 Mar 2023 06:36 AM
Last Updated : 10 Mar 2023 06:36 AM
திருநெல்வேலி: பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்திலுள்ள பூங்கா பாழடை ந்திருப்பது பொழுது போக்குக்காக இங்குவரும் திருநெல்வேலி மாநகர மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. மைதானத்தின் வடபுறமுள்ள சிறுவர் பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்து பரிதாபகரமாக காட்சியளிக்கின்றன.
பாளையங்கோட்டையின் முக்கிய அடையாளமான வ.உ.சி. மைதானம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அம்ருத் திட்டத்தின் கீழ் கடந்த 2017-18-ம் ஆண்டில் ரூ.10 லட்சத்தில் மைதானத்தின் வடக்கு மற்றும் மேற்கு புறத்தில் சிறுவர் பூங்காவில் செடிகள் வளர்க்கப்பட்டன. இங்கு சிறுவர்களுக்கான பல்வேறு விளையாட்டு உபகரணங்களும் அமைக்கப்பட்டிருந்தன.
ஊஞ்சல்கள், சறுக்குகள் உள்ளிட்ட உபகரணங்களும், நீர்வீழ்ச்சிகள் போன்ற அமைப்பு, பழைய இரும்பு பொருட் களால் உருவாக்கப்பட்ட குதிரை உள்ளிட்ட விலங்குகள், பறவைகளின் உருவங்களும் நிறுவப்பட்டிருந்தன.
விடுமுறை நாட்களிலும், அன்றாடம் மாலையிலும் சிறுவர், சிறுமியரும், அவர்களது பெற்றோ ரும் இந்த பூங்காவில் குவிவது வழக்கம். ஆனால் பூங்கா பாழடைந்திருப்பது அவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. விளையாட்டு உபகரணங்கள் பலவும் பழுதடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.
தொடர் பராமரிப்பு செய்யப் படாத தால் அலங்கார செயற்கை நீரூற்று பொலிவிழந்துள்ளது. அதன்மீது ஏறி மாணவர் கள் செல்பி எடுத்துக் கொண்டிருக் கிறார்கள். சுற்றிலும் புதர் மண்டியிருக்கிறது. இரும்பு பொருட்களால் உருவாக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த விலங்கு கள், பறவைகளின் உருவங் களும் துருப்பிடித்தும், உருத் தெரியாமலும் மாறியிருக்கின்றன.
புல் தரைகள் கட்டாந்தரையாகி, குப்பைகள் கொட்டும் பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. பாழடைந்து ள்ள இந்த பூங்காவின் சுற்றுச் சுவர்களில் அரசியல் கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சுவரொட்டிகளை ஒட்டி வருகிறார்கள்.
இது குறித்து இங்குவந்த பொதுமக்கள் கூறும்போது, “சிறுவர் பூங்காவினுள் கட்டப் பட்டுள்ள கழிப்பிடம் சரியாக பராமரிக்கப்படவில்லை. அதை பூட்டியே வைத்துள்ளனர். பூங்காவினுள் இருக்கும் மின் கட்டுப்பாட்டு அறை திறந்தே இருக்கிறது.
இது தெரியாமல் மாணவர்கள் அங்கு சென்றால் மின்விபத்து ஏற்படும் அபாயம் இருக்கிறது. திருநெல்வேலி மாநகரில் பொழுதுபோக்கு அம்சங்கள் குறைவாக இருக்கும் நிலையில் சாதாரண மக்கள் வந்து செல்லும் இந்த பூங்கா பாழடைந்து காணப்படுவது வேதனை அளிக்கிறது” என தெரிவித்தனர்.
கோடை விடுமுறை தொடங்க உள்ள நிலையில் திருநெல்வேலி மாநகர மக்களுக்கு முக்கிய பொழுதுபோக்கு இடமாக திகழும் இந்த பூங்காவை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT