ஐ.நா. மனித உரிமை கூட்டத்தில் பங்கேற்க ஸ்டாலினுக்கு அழைப்பு

ஐ.நா. மனித உரிமை கூட்டத்தில் பங்கேற்க ஸ்டாலினுக்கு அழைப்பு
Updated on
1 min read

ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் பங்கேற்க திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா) 2017-18ம் ஆண்டு அறிக்கை யில், ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து திமுகவும், டெசோ அமைப்பும் இணைந்து நிறை வேற்றிய தீர்மானங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதன்மூலம் ஈழத் தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண திமுக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் உலக அரங்கில் ஆணித்தரமாக வெளிப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் விஸ்வநாதன், திமுக செயல் தலைவரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 17-ம் தேதி எழுதிய கடிதத்தில், ‘மே 19 முதல் 21-ம் தேதி வரை அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள தமிழீழ அரசின் 7-வது நேரடி அமர்வில் கலந்துகொள்ள வேண்டும்’ என அழைப்பு விடுத்துள்ளார். ஈழத் தமிழர்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்துக்கு ஸ்டாலினின் பங்கேற்பு வலு சேர்க்கும் என தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் நடக்கிறது

அதேபோல ஜூன் 12 முதல் 20-ம் தேதி வரை ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் 35-வது ஆய்வுக் கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்று ஈழத் தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து பேச வேண்டும் என உலகம் முழுவதும் இருந்து தமிழர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் திமுக செய்தித் தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஈடுபட்டுள்ளார்.

பல்வேறு தீர்மானங்கள்

கடந்த 2012-ல் சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடை பெற்ற டெசோ மாநாட்டில் இலங்கைத் தமிழர் நல்வாழ்வுக்காக பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இந்தத் தீர்மானங் களை கொண்ட கோரிக்கை மனுவை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. துணைப் பொதுச்செயலாளர் யான் லியாசனிடம் ஸ்டாலின் நேரில் வழங்கினார். இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழர் பகுதிகளில் இருந்து ராணுவத்தை திரும்பப் பெற வேண்டும் என அப்போது ஸ்டாலின் வலியுறுத்தினார்.

இவ்வாறு அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in