நாட்டை காக்கும் ராணுவ வீரர்களுக்கு சொந்த ஊரில் அங்கீகாரம் இல்லை: ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கூட்டமைப்பு வருத்தம்

கிருஷ்ணகிரி அருகே வேலம்பட்டியில் ராணுவ வீரர் பிரபுவின் குடும்பத்தினருக்கு, ஓய்வு பெற்ற ராணுவவீரர் கூட்டமைப்பின் மாநில தலைவர் பழனியப்பன் மற்றும் நிர்வாகிகள் ஆறுதல் கூறினர்.
கிருஷ்ணகிரி அருகே வேலம்பட்டியில் ராணுவ வீரர் பிரபுவின் குடும்பத்தினருக்கு, ஓய்வு பெற்ற ராணுவவீரர் கூட்டமைப்பின் மாநில தலைவர் பழனியப்பன் மற்றும் நிர்வாகிகள் ஆறுதல் கூறினர்.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி: நாட்டை காக்க எல்லையில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கு சொந்த ஊரில் உரிய அங்கீகாரம் இல்லாதது வருத்தம் அளிக்கிறது என ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கூட்டமைப்பின் மாநில தலைவர் பழனியப்பன் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி அருகே வேலம் பட்டியில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் ராணுவ வீரர்பிரபு, அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் ஓய்வு பெற்ற ராணுவவீரர் கூட்டமைப்பின் மாநில தலைவர் பழனியப்பன் மற்றும் நிர்வாகிகள் நேற்று பிரபுவின் வீட்டுக்குச் சென்று, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

அப்போது, ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கூட்டமைப்பின் மாநில தலைவர் கூறியதாவது: தமிழகத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடக்க கூடாது. ராணுவ வீரர் பிரபு கொலை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். மேலும், பிரபுவின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

அவர்களது வாழ்வாதாரத்துக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு ஏற்படுத்தித் தர வேண்டும். நாட்டைக் காக்க எல்லையில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கு சொந்த ஊரில் உரிய அங்கீகாரம் இல்லாதது வருத்தம் அளிக்கிறது. இதனை அரசியலாக பார்க்காமல் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு என்ன சலுகைகள் கிடைக்க வேண்டுமோ, அதற்கு துணை நிற்க வேண்டும்.

எங்களது சங்கம் மூலம் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வோம். இதுபோன்ற சம்பவங்கள் இனிவரும் காலங்களில் நடக்க கூடாது, என்றார். இந்நிகழ்வின் போது ஓய்வு பெற்ற ராணுவ வீரர் விதவை நல கூட்டமைப்பு மாநில தலைவர் தீபாமற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in