பயிற்சி பெறும் 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாவட்ட உதவி ஆட்சியர்களாக நியமனம்

பயிற்சி பெறும் 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாவட்ட உதவி ஆட்சியர்களாக நியமனம்
Updated on
1 min read

ஐஏஎஸ் பயிற்சி பெறும் 12 பேர் மாவட்ட உதவி ஆட்சியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அரசு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட உத்தரவு:

முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய அகாடமியில் பயிற்சி பெறும் தமிழகத்துக்கான ஐஏஎஸ் அதிகாரிகள் 12 பேர் மாவட்ட உதவி ஆட்சியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்ட உதவி ஆட்சியராக அன்கூர் லதேர், திருநெல்வேலி மாவட்ட உதவி ஆட்சியராக ஏலாம்பகவத், திருச்சி மாவட்ட உதவி ஆட்சியராக நார்னாவர் மனீஷ் ஷங்கர்ராவ், திருவள்ளூர் உதவி ஆட்சியராக பன்வர்குமார், கோவை உதவி ஆட்சியராக சரண்யா அரி, தஞ்சை உதவி ஆட்சியராக சிபி ஆதித்ய செந்தில்குமார், விழுப்புரம் உதவி ஆட்சியராக சிம்ரஞ்சித்சிங், வேலூர் உதவி ஆட்சியராக காந்த், சேலம் உதவி ஆட்சியராக வைத்தியநாதன், ஈரோடு உதவி ஆட்சியராக விஷு மகாஜன், மதுரை உதவி ஆட்சியராக ரஞ்சித் சிங், தூத்துக்குடி உதவி ஆட்சியராக சரவணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மொழித் தேர்வு உள்ளிட்ட துறை ரீதியான தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் தான் மண்டல அளவில் பணி அமர்த்துவதற்கான தகுதியைப் பெறுவார்கள்.

எனவே, இந்த உதவி ஆட்சியர்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தேவையான அறிவுரையை வழங்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in