திருவாரூரில் இன்று ஆழித்தேரோட்டம்

திருவாரூரில் இன்று ஆழித்தேரோட்டம்
Updated on
1 min read

திருவாரூரில் இன்று (மே 29) ஆழித்தேரோட்டம் நடைபெறுகிறது. இதனால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

திருவாரூர் தியாகராஜர் கோயி லின் பிரசித்திபெற்ற ஆழித்தே ரோட்ட விழாவையொட்டி கடந்த 22-ம் தேதி ஆழித்தேரில் தியாக ராஜர் எழுந்தருளினார்.

இதைத் தொடர்ந்து விநாயகர், சுப்பிரமணியர் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து, இன்று காலை ஆழித்தேரோட்டம் நடைபெறுகிறது. காலை 7.05 மணிக்கு தொடங்கும் விழாவில், ஆழித்தேர் முன்னே செல்ல, அதைத் தொடர்ந்து சண்டிகேஸ்வரர், நிலோத்பாலாம்பாளின் தேரோட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.

தேரோட்ட விழாவுக்காக திரு வாரூர் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட் டுள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து திருவாரூருக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in