ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வர் வீட்டில் 80 பவுன் திருட்டு

ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வர் வீட்டில் 80 பவுன் திருட்டு
Updated on: 
1 min read

மதுரை கோமதிபுரம் 1-வது தெருவில் வசிப்பவர் இரா.ராஜா கோவிந்தசாமி. இவர் மதுரை தியாகராஜர் கலை, அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத்துறைப் பேராசிரியராக பணிபுரிந்து, அதே கல்லூரி முதல்வராகி ஓய்வு பெற்றவர்.

தற்போது மதுரை மன்னர் கல்லூரி இயக்குநராகவும் உள்ளார். இவரது மனைவி ஆஷாதேவி. இவரும் அதே கல்லூரியில் விலங்கியல் துறையில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். 2 நாட்களுக்கு முன், இவர்கள் சிவகாசியில் உள்ள உறவினர் வீட்டுக்கு காரில் சென்றிருந்தனர்.

நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வீட்டுக் குள் சென்று பார்த்தபோது. பீரோவில் இருந்த 80 பவுன் நகை கொள்ளை யடிக்கப்பட்டது தெரிய வந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த மதுரை அண்ணா நகர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கைரேகை பிரிவு நிபுணர்களும் விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர். போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது.

இதுகுறித்த புகாரின்பேரில், அண்ணா நகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

X