Published : 08 Feb 2023 07:30 AM
Last Updated : 08 Feb 2023 07:30 AM
சென்னை மாவட்ட ஆட்சியர் சு.அமிர்தஜோதி வெளியிட்டசெய்திக்குறிப்பு: தமிழக அரசால் 2022-23-ம் ஆண்டுக்கான திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருதுக்கு திருநங்கைகளின் முன்னேற்றத்துக்கு சேவை புரிந்த திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம். இதற்கு தமிழக அரசின் விருதுகள் இணையதளமான ‘awards.tn.gov.in’-ல் வரும் பிப்.28-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்விருதுக்கு திருங்கைகள் அரசு உதவி பெறாமல் தானாக வாழ்க்கையில் முன்னேறி இருந்தல் வேண்டும். குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும். திருநங்கைகள் நலவாரியத்தில் உறுப்பினராக இருக்கக் கூடாது என்ற விதிமுறைகள் உள்ளன.
மேலும், அவர்கள் அளிக்க வேண்டிய கையேட்டில், சுயவிவர குறிப்பு, 2 புகைப்படங்கள், சுயசரிதை, விருதுகள் விவரம், சேவை பற்றிய செயல்முறை விளக்கம், சேவையை பாராட்டி பத்திரிகையில் வந்த செய்தித் தொகுப்பு, சேவையாற்றியதற்கான விரிவான அறிக்கை உள்ளிட்டவை இடம்பெற்றிருக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT