வடமாநில தொழிலாளர்களால் வேலையிழப்பு: ஆர்டிஓ அலுவலகத்தை தென்னை தொழிலாளர் முற்றுகை

உடுமலை கோட்டாட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்ட தென்னை தொழிலாளர்கள்.
உடுமலை கோட்டாட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்ட தென்னை தொழிலாளர்கள்.
Updated on
1 min read

உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் வடமாநில தொழிலாளர்கள் வருகையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி தென்னை தொழிலாளர்கள், கோட்டாட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு தென்னை தொழிலாளர் பேரவையின் சார்பில் அதன் தலைவர் கருப்புசாமி தலைமையில் 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் கோட்டாட்சியரிடம் அளித்த மனுவில், “கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பல ஆயிரம் தென்னை தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.

குறைந்த கூலிக்கு வடமாநில தொழிலாளர்களை பயன்படுத்துவதால், தமிழக தொழிலாளர்கள் வேலையிழந்து வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, தமிழக தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். தென்னை தொழிலாளர்கள் நல வாரியம் அமைக்க வேண்டு” என தெரிவித்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in