

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க தமாகா சார்பில் தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து தமாகா தேர்தல் பணியாற்றுகிறது. எனவே தமாகா சார்பில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் தலைவராக கட்சியின் ஈரோடு மத்திய மாவட்ட தலைவர் பி.விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன் நிர்வாகிகளாக மாநில துணைத் தலைவர் ஆர்.ஆறுமுகம், மாநில பொதுச் செயலாளர் விடியல் சேகர், மாநில இளைஞரணி தலைவர் எம்.யுவராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.சந்திரசேகர், மாநில தேர்தல் குழு உறுப்பினர் சி.எஸ்.கவுதமன், ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் வி.பி. சண்முகம், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் பிரகாஷ் ஜெயின் உள்ளிட்ட 15 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.