“அறம், மறம், ஆயுதம்...” - நேதாஜிக்கு கமல்ஹாசன் புகழஞ்சலி

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: "அறம் எங்கே செல்லுபடியாகும் என்று யோசித்து, இந்திய விடுதலைப் போரில் மறம் என்கிற ஆயுதத்தை ஏந்தி வீரம் காட்டியவர் நேதாஜி என உயர்ந்த சுபாஷ் சந்திரபோஸ்" என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அறம் எங்கே செல்லுபடியாகும் என்று யோசித்து, இந்திய விடுதலைப் போரில் மறம் என்கிற ஆயுதத்தை ஏந்தி வீரம் காட்டியவர் நேதாஜி என உயர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள். அவரது 126-ஆவது பிறந்த நாளில் அவரது வீரத்தைப் போற்றுவோம்" என்று பதிவிட்டுள்ளார்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 126-வது பிறந்தநாள் இன்று (திங்கள்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தலைவர்கள் பலரும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸிற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

முன்னதாக பிரதமர் மோடி, தனது ட்விட்டர் பதிவில் ,“பராக்ரம தினமான இன்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு மரியாதை செலுத்துவதோடு இந்திய வரலாற்றில் அவர் அளித்த ஈடு இணையில்லா பங்களிப்பை நினைவுகூர்கிறேன். காலனித்துவ ஆட்சிக்கு எதிராக அவர் காட்டிய தீவிர எதிர்ப்பினால் அனைவராலும் என்றும் நினைவில் கொள்ளப்படுவார். அவரது சிந்தனைகளால் வெகுவாக ஈர்க்கப்பட்டு, இந்தியா குறித்த அவரது தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற நாம் பணியாற்றுகிறோம்” என்று தெரிவித்திருந்தார்.

இதேபோல், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட பலரும் தங்களது ட்விட்டர் பக்கங்களில் புகழஞ்சலி செலுத்தியிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in