பொங்கல் விடுமுறை: சென்னை மெட்ரோவில் 5 நாட்களில் 8.36 லட்சம் பேர் பயணம்

சென்னை மெட்ரோ ரயில் | கோப்புப் படம்
சென்னை மெட்ரோ ரயில் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: பொங்கல் விடுமுறையை முன்னிட்டு இம்மாதம் 13-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை சென்னை மெட்ரோ ரயிலில் 8.36 லட்சம் பேர் பயணித்துள்ளன.

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு மெட்ரோ மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டது. இதன்படி 13 மற்றும் 14-ம் தேதி மாலை 5 மணி முதல் 10 மணி வரை 5 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது. மேலும், கடைசி ரயில் அனைத்து முனையங்களில் இருந்து இரவு 12 மணிக்கு புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக பொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதன்படி 13-ம் தேதி 2.66 லட்சம் பயணங்கள், 14-ம் தேதி 1.62 லட்சம் பயணங்கள், 15-ம் தேதி 1.08 லட்சம் பயணங்கள், 16-ம் தேதி 1.34 லட்சம் பயணங்கள், 17-ம் தேதி 1.65 லட்சம் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.13-ம் தேதி முதல் 17ம் தேதி வரை மெட்ரோ ரயிலில் 8.36 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இதில், சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் 21,731 பயணங்கள், கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் 14,469 பயணங்கள், திருமங்கலத்தில் 13,607 பயணங்கள், விமான நிலையம் ரயில் நிலையத்தில் 12,909 பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in