மதுரை | மு.க.அழகிரியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார்

மு.க.அழகிரி - உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு
மு.க.அழகிரி - உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு
Updated on
1 min read

மதுரை: மதுரை மாநகரில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை, தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார். நாளை அலங்காநல்லூரில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். அதை முன்னிட்டு அவர் தற்போது மதுரையில் உள்ளார்.

இந்த சூழலில் மதுரை சென்றுள்ள உதயநிதி ஸ்டாலின், மதுரை டிவிஎஸ் நகரில் அமைந்துள்ள அழகிரியின் இல்லத்தில் அவரை சந்தித்தார். அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் தனது பெரியப்பாவான அழகிரியை முதல் முறையாக அவர் சந்தித்துள்ளார். அவரை வரவேற்க வீட்டு வாசலில் அழகிரி காத்திருந்தார்.

இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என தெரிகிறது. பெரியப்பாவை பார்க்க மகன் வருகிறான் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்திருந்தார் மு.க.அழகிரி.

அவனியாபுரம், பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. நாளை அலங்காநல்லூரில் நடைபெற உள்ளது. இதில் சுமார் 1000க்கும் மேற்பட்ட காளைகள், 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்க உள்ளனர். வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in