ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கல்குவாரிக்கு எதிர்ப்பு - வகுப்புகளை புறக்கணித்த பள்ளி மாணவர்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கல்குவாரிக்கு எதிர்ப்பு - வகுப்புகளை புறக்கணித்த பள்ளி மாணவர்கள்
Updated on
1 min read

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அச்சம்தவிர்த்தான் ஊராட்சியில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் இன்று ஒருநாள் வகுப்புகளைப் புறக்கணித்தனர்.

மதுரை - கொல்லம் நான்கு வழிச்சாலையில் வடுகப்பட்டி முதல் தெற்குவெங்காநல்லூர் வரையிலான 36 கிலோமீட்டர் தூர பணிகளுக்காக அச்சம் தவிர்த்தான் ஊராட்சியில் கல்குவாரி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

விளை நிலங்களுக்கு நடுவே கல்குவாரி அமைக்கப்பட்டுள்ளதால் இப்பகுதியில் விவசாயம் பாதிக்கப்படும் எனக் கூறி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பெற்றோர்களுக்கு ஆதரவாக அக்கரைப்பட்டி நடுநிலைப் பள்ளியில் படிக்கும் 193 மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்தனர். மேலும், மாணவர்கள் பள்ளி நுழைவு வாயிலில் கல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் இன்று ஒரு நாள் வகுப்புகளைப் புறக்கணிக்கிறோம் என்ற கடிதத்தை ஒட்டி விட்டுச் சென்றனர். மாணவர்கள் யாரும் வராததால் ஆசிரியர்கள் வீடு வீடாகச் சென்று மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in