மெய்ஞானத்தின் மூலம் உலகை வெல்வோம்: அண்ணாமலை பேச்சு

அண்ணாமலை | கோப்புப் படம்
அண்ணாமலை | கோப்புப் படம்
Updated on
1 min read

உடுமலை: மெய்ஞானத்தின் மூலம் உலகை வெல்வோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.

உடுமலை அருகே திருமூர்த்திமலையில் உள்ள ஆசிரம நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசும்போது, ‘‘நாம் யார் என்பதை உணர்வதே தியானத்தின் சக்தி. இந்தியா போன்ற நாடுகள் அமைதியை விரும்புகிறது. இன்றளவும் உலக நாடுகளிடையே போர் நடைபெற்று வருகிறது. வாள் முனையில் படையெடுத்து வந்தவர்கள்தான் இந்தியாவில் இருந்த கோயில்களை அழித்தனர். மக்களை கொன்றனர்.

தன்னிடம் 70 சதவீதம் நிலப்பரப்பு இருந்தபோதும், தனது மகனையும், மகளையும் பிற நாடுகளுக்கு சென்று அமைதியை போதிக்க அனுப்பியவர் பேரரசர் அசோகர். கலிங்கத்துப்போர் அவருக்கு திருப்பு முனையை ஏற்படுத்தியது. அமைதியை விரும்பினார். ஆனால் இன்றளவும் உலக நாடுகளிடையே மோதல் நடைபெற்று வருகிறது. மெய்ஞானம் மூலம் உலகை வெல்ல வேண்டும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in