மெட்ரோ ரயில் பணி: மாம்பலம் பிரதான சாலையில் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம்

போக்குவரத்து மாற்றம் | பிரதிநிதித்துவப் படம்
போக்குவரத்து மாற்றம் | பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

சென்னை: மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக மாம்பலம் பிரதான சாலையில் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.

மாம்பலம் பிரதான சாலையில் (கோடம்பாக்கம் மெட்ரோ ஸ்டேசன்) மெட்ரோ ரயில் பணிகளுக்கான மேற்கொள்ளப்பட உள்ள கட்டுமானப் பணிகளுக்காக போக்குவரத்து மாற்றங்கள் திட்டமிடப்பட்டு கடந்த 25 ஆம் தேதி முதல் ஒரு வாரகாலத்திற்கு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த ஒரு வாரத்திற்கான சோதனை ஓட்டம் நன்கு செயல்பட்டதால் மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் கோரிக்கையின் படி இந்த போக்குவரத்து மாற்றங்கள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 15 மாதங்கள் நீட்டிக்கப்படுவதாக சென்னை போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது.

இதன் விவரம்:

  • மாம்பலம் பிரதான சாலையில் தியாகராய கிராமனி சாலை சந்திப்பு முதல் ஹபிபுல்லா சாலை சந்திப்பு வரை போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.
  • மாம்பலம் பிரதான சாலையில் இருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் பக்கம் செல்ல விரும்பும் இலகு ரக வாகனங்கள் தியாகராய கிராமனி சாலை சந்திப்பில் தடை செய்யப்பட்டு, மேற்கண்ட வாகனங்கள் தியாகராய சாலை, வடக்கு உஸ்மான் சாலை மற்றும் ஹபிபுல்லா சாலை வழியாகவும் செல்லலாம்.
  • மாம்பலம் பிரதான சாலையில் கோடம்பாக்கம் மேம்பாலம் பக்கத்திலிருந்து தி.நகர் பக்கம் செல்ல விரும்பும் இலகு ரக வாகனங்கள், ஹபிபுல்லா சாலை சந்திப்பில் தடைசெய்யப்பட்டு, ஹபிபுல்லா சாலை மற்றும் வடக்கு உஸ்மான் சாலை வழியாகவும் செல்லலாம்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in