

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தனியார் திருமண மண்ட பத்தில் பாஜகவின் நிர்வாகிகள் செயற்குழு கூட்டம், மாவட்ட தலைவர் அருள் தலைமையில் நேற்று மாலை 6 மணியளவில் தொடங்கியது.
மேலும், இக்கூட்டத்துடன் பாஜக-வின் மற்றொரு பிரிவான ‘சக்தி கேந்திரா’ எனும் பிரிவிற்கு துணைத் தலைவர் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு தொடர்பான ஆலோசனையும் நடந்தது. இந்தக் கூட்டத்தில், சங்கராபுரம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட பாஜகநிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக பாஜக கிழக்கு ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன் கோஷ்டியும், மாவட்ட பொதுச் செயலாளர் ரவியின் கோஷ்டியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் அதுகைகலப்பாக மாறி, ஒருவரைவொருவர் சட்டையை பிடித்துக் கொண்டு, அருகில் இருந்த நாற்காலியை எடுத்து சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.
மேலும் கூட்டத்தில் ஒருவருக் கொருவர் சரமாரியாக தாக்கிய தில் 20-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் காயமடைந்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்கராபுரம் காவல்துறையினர் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். இரவு அவர்களுக்குள் சமாதானப் பேச்சு வார்த்தை நடந்தது.