

கோவை: சுபஸ்ரீ மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக கோவையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சுபஸ்ரீ மரணம் மறைக்கப்படுவதாக மக்கள் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக ஈஷா நிறுவனம், ஜக்கி வாசுதேவை விசாரிக்க வேண்டும். வரும் 6ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
ஒய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியை கொண்டு முழு விசாரணை நடத்த வேண்டும். தமிழக காவல்துறை தயக்கமில்லாமல், மென்மை போக்கை கடைபிடிக்காமல், சுபஸ்ரீ விவகாரத்தை கையாள வேண்டும். சட்டப்பேரவையில் இது தொடர்பாக கேட்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.