

வங்கக்கடலில் புதிதாக உருவாகியுள்ள 'வர்தா' புயலால் தமிழகத்துக்கு மழை வருமா என்பது குறித்து வானிலை ஆர்வலர் தமிழ்நாடு வெதர்மேன் தனது கணிப்புகளை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
1. வர்தா என்ற பெயரை பாகிஸ்தான் நாடு வழங்கியுள்ளது.
2. தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள 'வர்தா' புயல் காரணமாக, ஆந்திர கடலோரப் பகுதிகளில் அதிக மழைக்கு வாய்ப்புள்ளது.
3. வர்தா புயல், வரும் 12-ம் தேதி இந்தப் புயல் நெல்லூருக்கும் காக்கிநாடாவுக்கும் இடையே கரையைக் கடக்கும். கரையை கடக்கும்போது வலுவிழந்தே கடக்கும்.
4. தற்போது இந்தப் புயல் நகரும் அதே திசையை நோக்கி முன்னேறி கரையைக் கடக்குமானால் தமிழகத்தில் சிறிதும் மழை பெய்ய வாய்ப்பில்லை.
5. ஆனால், ஒருவேளை இந்தப் புயல் மேற்கு நோக்கி நகர்ந்து நெல்லூர் - சென்னைக்கு இடையே கரையைக் கடந்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
6. வர்தா புயல் கரையைக் கடந்ததும் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை வங்கக் கடலில் உருவாகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.