

ஜெயலலிதாவின் மறைவு தமிழ்நாட்டிற்கு மட்டும் ஏற்பட்ட இழப்பு அல்ல, நாட்டுக்கே ஏற்பட்டுள்ள இழப்பு என்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இன்று(செவ்வாய்க்கிழமை) முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக மக்களவையை ஒத்தி வைத்துப் பேசிய மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், ''இந்திய நாடு மிகவும் பிரபலமான, தைரியம் மிக்க, சிறந்த பொது ஆளுமையை இழந்துவிட்டது.
ஜெயலலிதாவின் மறைவு தமிழ்நாட்டிற்கு மட்டும் ஏற்பட்ட இழப்பு அல்ல, நாட்டுக்கே ஏற்பட்டுள்ள இழப்பாகும்.
செல்வி ஜெயலலிதா மக்களின் உண்மையான தலைவராக இருந்தார். அவரின் தொண்டர்கள் அவரை அம்மா என்றும், புரட்சித்தலைவர் என்றும் அழைத்தனர்'' என்று கூறினார்.