பணப் பயன்பாடு சீரடையும் முன் சுங்கம் வசூலித்தால் போக்குவரத்து ஸ்தம்பிக்கும்: லாரி உரிமையாளர் சங்க பொதுச் செயலாளர் தகவல்

பணப் பயன்பாடு சீரடையும் முன் சுங்கம் வசூலித்தால் போக்குவரத்து ஸ்தம்பிக்கும்: லாரி உரிமையாளர் சங்க பொதுச் செயலாளர் தகவல்
Updated on
1 min read

பண மதிப்பு நீக்க சூழல் சீரடையாத நிலையில் சுங்கச் சாவடிகளில் கட்டண வசூல் மேற் கொண்டால் இந்தியா முழுவதும் சரக்கு வாகனப் போக்குவரத்து ஸ்தம்பித்துவிடும் என தென் மண்டல லாரி உரிமையாளர் சங்க பொதுச் செயலாளர் தெரிவித்தார்.

மாநில லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தருமபுரியில் நேற்று நடந்தது. கூட்டத்தில் தென் மண்டல லாரி உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் சண்முகப்பா கலந்துகொண்டார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

லாரி தொழில் முழுவதும் நேரடி பண பரிவர்த்தனையை அடிப்படை யாகக் கொண்டு நடக்கிறது. லாரி களுக்கு எரிபொருள் நிரப்புவது, பாரம் ஏற்றி-இறக்கும் கூலி, சுங்கச் சாவடி, லாரிகள் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு, ஓட்டுநர்களின் உணவு உள்ளிட்ட செலவினங்கள் அனைத்துக்கும் நேரடியாக பணம் தேவைப்படுகிறது.

இந்நிலையில், மத்திய அரசின் அறிவிப்பால் ரூபாய் நோட்டு களைப் பயன்படுத்த முடியாமல் தொழில் பெரிய அளவில் பாதிப் படைந்துள்ளது. இந்த சூழலை சமாளிக்க உதவும் வகையில் சுங்கச் சாவடிகளில் கட்டணமின்றி பயணிக்க மத்திய அரசு அனுமதி வழங்கி இருந்தது. டிசம்பர் 2-ம் தேதியுடன் இந்த சலுகை முடிவுக்கு வருகிறது. ஆனால், பண மதிப்பு நீக்கத்துக்குப் பிறகு இன்னும் இயல்பு நிலை ஏற்படவில்லை.

இந்த சூழலில் சுங்கச் சாவடி களில் கட்டணம் வசூலிக்கத் தொடங்கினால் லாரி போக்கு வரத்து கடுமையாக பாதிக்கும். இதை கருத்தில்கொண்டு டிசம் பர் 31-ம் தேதி வரை சுங்கச் சாவடி களை கட்டணமின்றி கடந்து செல்ல அனுமதிக்க வேண்டும். மேலும், பெட்ரோல் நிலையங்களிலும் இம் மாத இறுதி வரை பழைய 500 ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ள உத்தரவிட வேண்டும்.

இது தவிர, இந்தியா முழு வதும் உள்ள 350-க்கும் மேற்பட்ட சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை நிரந்தரமாக கைவிட வேண்டும்.

இதற்கு மாறாக, ஆண்டுக்கு ஒரு முறை லாரி ஒன்றுக்கு ரூ.40 ஆயிரம் கட்டணம் செலுத்த ஒப்புக்கொள்கிறோம். அல்லது, ஒவ்வொரு லிட்டர் டீசல் மீதும் ரூ.1.50 கூடுதல் விலை வழங்க தயாராக உள்ளோம். இதில் ஏதாவது ஒன்றை அனுமதிக்க அரசு முன்வர வேண்டும். இவ்வாறு கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in