திருவள்ளூர் | விபத்தில் மூளைச்சாவு அடைந்த தொலைக்காட்சி நிருபரின் உடல் உறுப்புகள் தானம்

சந்தானம்
சந்தானம்
Updated on
1 min read

திருவள்ளூர்: சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்த தனியார் தொலைக் காட்சி செய்தியாளரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் அடுத்த செஞ்சிபனம்பாக்கம் கிராமத்தைச் சேந்தவர் சந்தானம் (32). தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளராக பணிபுரிந்தார்.

இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு பூண்டிக்கு செய்தி சேகரிக்க பைக்கில் சென்றுவிட்டு திரும்பும் போது சதுரங்கப்பேட்டை அருகே தனியார் பேருந்து மோதியதில் பலத்தக் காயம் அடைந்தார்.திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சந்தானம் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் நேற்று தெரிவித்தனர். இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன்வந்தனர். விபத்துக் குறித்து பென்னலூர்பேட்டை போலீஸார் விசாரிக்கின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in