மெட்ரோ ரயில் நிலையங்களில் டிச. 17, 18-ல் கலைநிகழ்ச்சிகள்

மெட்ரோ ரயில் நிலையங்களில் டிச. 17, 18-ல் கலைநிகழ்ச்சிகள்
Updated on
1 min read

சென்னை: தமிழ் கலாச்சாரம், பாரம்பரியத்தைப் போற்றும் வகையில், மெட்ரோ ரயில் நிலையங்களில் மெல்லிசை கலை நிகழ்ச்சிடிச. 17, 18 ஆகிய தேதிகளில் காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.

விமான நிலையம், கிண்டி, நந்தனம், ஆயிரம் விளக்கு, மண்ணடி, சென்ட்ரல், பரங்கிமலை, அசோக் நகர், திருமங்கலம் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் வரும் சனிக்கிழமை (டிச.17) நடைபெறுகிறது. இதுபோல, மெட்ரோ ரயில்களில் (விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை) இரவு 7 மணிக்கும், சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை செல்லும் ரயிலில் இரவு 7 மணிக்கும் மெல்லிசை கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதுபோல, விம்கோ நகர், வண்ணாரப்பேட்டை, ஆலந்தூர் மெட்ரோ, விமான நிலையம், வடபழனி, கோயம்பேடு, செனாய் நகர், நேரு பூங்கா ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் கலை நிகழ்ச்சி டிச.18-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளைச் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், ஆன் தி ஸ்டீரிட் ஆப் சென்னை கலைக் குழு இணைந்து செய்துள்ளன. இந்தத் தகவல் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in