வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 19-ம் தேதி தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

காற்றழுத்த தாழ்வுப் பகுதி
காற்றழுத்த தாழ்வுப் பகுதி
Updated on
1 min read

சென்னை: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக 19 ஆம் தேதியன்று தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும். இதன் காரணமாக தமிழ்நாட்டில் 19 ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை 5 செ.மீ, விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 3 செ.மீ, வெம்பக்கோட்டை, மணிமுத்தாறு ஆகிய பகுதிகளில் தலா 2 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in