பாபநாசம் அருகே விஷம் கொடுத்து 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை: கணவருடன் ஏற்பட்ட தகராறால் விபரீத முடிவு

பாபநாசம் அருகே விஷம் கொடுத்து 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை: கணவருடன் ஏற்பட்ட தகராறால் விபரீத முடிவு
Updated on
1 min read

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே 2 பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, தாயும் குடித்தார். இதில், 3 பேரும் உயிரிழந்தனர்.

பனந்திடல் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் விவசாயி ராஜசேகர் (40), இவரது மனைவி கலை யரசி(35). இவர்களுக்கு நான்கரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு லாசியா (3), லக்ஷிதா(11 மாதம்) என 2 பெண் குழந்தைகள் இருந் தனர்.

இந்நிலையில், கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனமுடைந்த கலையரசி நேற்று முன்தினம் 2 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு, தானும் குடித்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 3 பேரில், கலையரசி, லாசியா ஆகியோர் நேற்று முன்தினம் இரவும், லஷிதா நேற்று காலையும் இறந்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in