Published : 28 Nov 2022 06:51 AM
Last Updated : 28 Nov 2022 06:51 AM

திமுக உயர்நிலை செயல்திட்ட குழுவில் ஆற்காடு வீராசாமி உட்பட 19 பேர் சேர்ப்பு; அமைப்புசாரா ஓட்டுநர், விளையாட்டு மேம்பாட்டு அணிகள் உருவாக்கம்

சென்னை: திமுக உயர்நிலை செயல்திட்ட குழுவில் ஆற்காடு வீராசாமி, டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட 19 நிர்வாகிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுதவிர, திமுகவில் அமைப்புசாரா ஓட்டுநர் அணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அணிகள் புதிதாக உருவாக்கப்பட்டு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திமுக சட்ட விதிகளின்படி, திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர்களாக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, தலைமைக் கழகமுதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் ப.செல்வராஜ், கனிமொழி எம்.பி., அமைப்பு செயலாளர் ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதிசெயல்பட்டு வருகின்றனர்.

அவர்களுடன், ஆற்காடு நா.வீராசாமி, டி.கே.எஸ்.இளங்கோவன், தயாநிதி மாறன், சுப.தங்கவேலன், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், கரூர் கே.சி.பழனிசாமி, கோவை மு.கண்ணப்பன், எல்.கணேசன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பொன்.முத்துராமலிங்கம், திருச்சி சிவா, எ.வ.வேலு, எஸ்.ஜெகத்ரட்சகன், மு.பெ.சாமிநாதன், எல்.மூக்கையா, திருச்செங்கோடு எம்.கந்தசாமி, கும்மிடிப்பூண்டி கி.வேணு, பெ.குழந்தைவேலு, குத்தாலம் பி.கல்யாணம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அமைப்பு செயலாளராக ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி, இணை அமைப்பு செயலாளராக அன்பகம் கலை, துணை அமைப்பு செயலாளர்களாக எஸ்.ஆஸ்டின், ப.தாயகம் கவி, தலைமைக் கழக சட்டதலைமை ஆலோசகர் வழக்கறிஞர் பி.வில்சன், சட்டத் துறை தலைவர் ஆர்.விடுதலை, சட்டத் துறைசெயலாளர் என்.ஆர்.இளங்கோ, இணை செயலாளர்கள் இ.பரந்தாமன், வீ.கண்ணதாசன், என்.மணிராஜ், கே.எஸ்.ரவிச்சந்திரன், கே.எம்.தண்டபாணி, சு.ராதாகிருஷ்ணன், அருள்மொழி நியமிக்கப்பட்டுஉள்ளனர்.

திமுக வழக்கறிஞர்களாக ப.கணேசன், சூர்யா வெற்றி கொண்டான், கே.ஜெ.சரவணன், வீ.கவிகணேசன், எம்.எல்.ஜெகன்,ஏ.என்.லிவிங்ஸ்டன், கே.மறைமலை நியமிக்கப்பட்டுள்ளனர்.

கொள்கை பரப்பு செயலாளர்களாக திருச்சி சிவா, திண்டுக்கல் ஐ.லியோனி, எஸ்.ஜெகத்ரட்சகன், சபாபதி மோகன் ஆகியோரும், இணை செயலாளர்களாக நெல்லிக்குப்பம் புகழேந்தி, வி.சி.சந்திரகுமாரும், தலைமை நிலைய அலுவலக செயலாளர்களாக துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன், கு.க.செல்வம், தொழிலாளர் அணி செயலாளராக பிடிசி ஜி.செல்வராஜ், துணை செயலாளர்களாக பிடிசி வெ.பாலு, ராஜா குப்புசாமி, கொல்லாபுரம் ராஜேந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய அணிகள் உதயம்: மேலும், திமுக துணை அமைப்புகள், சார்பு மன்றங்கள் தலைப்பிலான விதியின்படி அமைப்பு சாரா ஓட்டுநர்கள் நலன் கருதி, ‘திமுக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி’ மற்றும் ‘திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி' ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன.

அமைப்பு சாரா ஓட்டுநர் அணித் தலைவராக டி.எம்.கதிர் ஆனந்த், செயலாளராக டி.செங்குட்டுவன், துணை செயலாளர்களாக முத்துராஜா, பணப்பட்டி கே.தினகரன்,நாகர்கோவில் எம்.சிவராஜ், பொன்னேரி ஏ.ஆர்.டி.உதயசூரியன், கோவை விஷ்ணுபிரபு நியமிக்கப்பட்டுள்ளனர்.

விளையாட்டு மேம்பாட்டு அணிசெயலாளராக தயாநிதி மாறன், துணை செயலாளர்களாக கவுதமசிகாமணி, எஸ்.ஆர்.பார்த்திபன், ஈஸ்வரப்பன், பைந்தமிழ் பாரி,வே.நம்பி நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x