வத்திராயிருப்பு அருகே சமையல் சிலிண்டர்  கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் கணவன், மனைவி காயம்

பணியில் தீயணைப்பு துறை வீரர்கள்
பணியில் தீயணைப்பு துறை வீரர்கள்
Updated on
1 min read

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே சுந்தரபாண்டியம் செம்மபட்டியை சேர்ந்தவர் பெரியசாமி (55). இவரது மனைவி பழனியம்மாள் (48). இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.

மாலை பெரியசாமி வீட்டில் இருந்த கேஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளார். ஆனால் சிலிண்டரில் ஏற்கனவே கசிவு இருந்ததால் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கணவன், மனைவி இருவர் மீதும் தீ பிடித்தது. அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் வத்திராயிருப்பு தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர்.

காயமடைந்த இருவரையம் 108 ஆம்புலன்ஸ் மூலம் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பெரியசாமி மதுரை அரசு மருத்துவமனைக்கும், பழனியம்மாள் விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து கிருஷ்ணன்கோவில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in