

சென்னை: தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளாது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னையில் இருந்து சுமார் 450 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இது மேலும் தொடர்ந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவிழந்து தமிழகம் - புதுவை, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நாளை காலை நெருங்கக்கூடும்.
இதன் காரணமாக இன்று (நவ.21) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். மேலும் நாளை (நவ.22) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்று" தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று காலை முதல் குளிர்ந்த வானிலை நிலவுகிறது. குளிர்ந்த காற்று வீசுகிறது. மேலும் ஒரு சில இடங்களில் சாரல் மழையும் பெய்து வருகிறது.