மதுரை அவனியாபுரத்தில் கார் மீது பெட்ரோல் குண்டு வீசி 7 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 9 பேர் குற்றவாளிகள்

மதுரை அவனியாபுரத்தில் கார் மீது பெட்ரோல் குண்டு வீசி 7 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 9 பேர் குற்றவாளிகள்
Updated on
1 min read

கரூர்: தேவர் ஜெயந்தி விழா​வில் பங்​கேற்​று​விட்டு காரில் திரும்​பிக் கொண்​டிருந்​தவர்​கள் மீது மதுரை அவனி​யாபுரத்​தில் பெட்​ரோல் குண்டு வீசி 7 பேர் கொல்​லப்​பட்ட வழக்​கில் குற்​றம் சாட்​டப்​பட்ட 9 பேரும் குற்​ற​வாளி​கள் என கரூர் நீதி​மன்​றம் நேற்று தீர்ப்​பளித்​தது.

மதுரை மணலூர் புளி​யங்​குளத்தை சேர்ந்​த சிலர், கடந்த 2012-ம் ஆண்டு தேவர் ஜெயந்தி விழா​வில் பங்​கேற்​று​விட்டு ஊருக்​குத் திரும்​பிக் கொண்​டிருந்​தனர். மதுரையை அடுத்த சிந்​தாமணி அருகே வந்​த​போது ஒரு கும்​பல் வழிமறித்து பெட்​ரோல் குண்​டு​களை வீசி​ய​து.

இதில், காரில் பயணித்த 7 பேர் உயி​ரிழந்​தனர். இந்​தக் கொலை வழக்​கில் மதுரை மேல அனுப்​பானடி ராமர் பாண்​டி, சிந்​தாமணி​யைச் சேர்ந்த மணி​கண்​டன் (கார்த்​திக்), முத்​து​விஜி, சந்​திர சேகர், சோனை​யா, நாக​ராஜ், முத்​துக்​கருப்​பன், மோகன், விக்​னேஷ், சந்​தோஷ் ஆகிய 11 பேரை அவனி​யாபுரம் போலீ​ஸார் கைது செய்​தனர்.

இவ்​வழக்கு விசா​ரணை காலத்​தில் 2013-ல் முத்​து​விஜி கொலை செய்​யப்​பட்​டார். இதையடுத்​து, குற்​ற​வாளி​களின் உயிருக்கு ஆபத்து இருப்​ப​தாகக்கூறி, இந்த வழக்கு கரூர் மாவட்ட அமர்வு நீதி​மன்​றத்​துக்கு மாற்​றப்​பட்​டது.

இவ்​வழக்​கில் தொடர்​புடைய ராமர் பாண்டி, 2024-ல் கரூர் நீதி​மன்றத்தில் ஆஜராகி​விட்டு ஊர் திரும்​பும் வழியில், அரவக்​குறிச்சி அருகே வெட்​டிக் கொல்​லப்​பட்​டார்.

கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதி​மன்​றத்​தில் நடை​பெற்று வந்த இந்த வழக்​கில் 69 சாட்​சிகளிடம் விசா​ரணை நடை​பெற்​றது. 48 சாட்​சிகளிடம் ஆய்வு மேற்​கொள்​ளப்​பட்​டு, 21 சாட்​சிகளின் விசா​ரணை தள்​ளு​படி செய்​யப்​பட்​டது.

வழக்கை விசா​ரித்த நீதிப​தி கே.எச். இளவழகன், கைது செய்​யப்​பட்ட 11 பேரில் 2 பேர் உயி​ரிழந்​து​விட்ட நிலை​யில், மீத​முள்ள 9 பேரும் குற்​ற​வாளி​கள் என நேற்று தீர்ப்​பளித்​தார்.

அவர்​களுக்​கான தண்​டனை விவரம் நாளை (மார்ச் 25) அறிவிக்​கப்​படும் எனவும் தெரிவித்துள்ளார். தீர்ப்​பையொட்​டி, கரூர் நீதி​மன்​றத்​தில் டிஎஸ்பி தலை​மை​யில் போலீ​ஸார்​ பாது​காப்​புப்​ பணி​யில்​ ஈடு​பட்​டிருந்தனர்​.

மதுரை அவனியாபுரத்தில் கார் மீது பெட்ரோல் குண்டு வீசி 7 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 9 பேர் குற்றவாளிகள்
மகனுக்கு வழிவிடுகிறாரா பொன்முடி? - சொல்லாமல் சொல்லும் சுவர் விளம்பரங்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in