

மதுரை: பிரதமர் மோடி திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைகழகத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்கபதற்காக பெங்களூரில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு தனி விமானம் மூலமாக வந்தடைந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடி மதுரை விமான நிலையத்திலிருந்து வருகை தந்து பின்னர் ஹெலிகாப்டர் மூலமாக சின்னாளபட்டி சென்று அங்கிருந்து காந்தி கிராமம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இடத்திற்குச் சென்றார். மோடி வருகையின் காரணமாக மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு விமானம் நிலையம் முழுவதிலும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது
மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ராமசந்திரன், தங்கம் தென்னரசு, பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜித் சிங் காலோன், மேயர் இந்திராணி, மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் மற்றும் விமான நிலைய அதிகாரிகள், பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, ஹெச்.ராஜா, பாஜக மகளிரணி நிர்வாகி மகாலெட்சுமி, பாஜகவினர் ஓபிஎஸ் தலைமையில் எம்பிக்கள் ரவீந்திரநாத், தர்மர், எம்எல்ஏக்கள் மனோஜ்பாண்டியன், ஐயப்பன், முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் மற்றும் எடப்பாடி பழனிச்சாமியுடன் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோரும் வரவேற்றனர்.
தற்போது திண்டுக்கல் பட்டமளிப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். அந்த நிகழ்ச்சிக்குப் பின், மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்து பின்னர் மாலையில் தனி விமானம் மூலமாக விசாகபட்டினம் செல்கிறார்.