

கும்பகோணம்: கும்பகோணத்தில் தமிழ்ச்சங்க செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
கும்பகோணம் தொகுதி எம்எல்ஏவும், கும்பகோணம் தமிழ்ச்சங்கத் தலைவருமான சாக்கோட்டை க.அன்பழகன் தலைமை வகித்தார். தேசிய நல்லாசிரியரும், சங்கச் செயலாளருமான கா.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.
பொருளாளர் ம.சண்முகம், துணைத் தலைவர்கள் எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ந.பன்னீர்செல்வம், பெருமாண்டி ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.கே.பாஸ்கர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அறிவிக்க வேண்டும், ராஜராஜசோழன் இறுதிக்காலத்தில் வாழ்ந்த பகுதியான பழையாறை, உடையாளூரில் அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும்.
2028-ம் ஆண்டு மாசிமகாமகத்தை முன்னிட்டு உள்வட்டசாலைகள், மீதியுள்ள அரை வட்டச்சாலை, தஞ்சாவூர்- கும்பகோணம் சாலை ஆகியவற்றை அகலப்படுத்தி, புதிய சாலைகள் அமைக்க வேண்டும். தஞ்சாவூர்- விழுப்புரம் இடையே இரட்டை வழி ரயில்பாதை அமைக்க வேண்டும் என்பனஉள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.