தமிழகத்திற்கு நவ.1, 2ம் தேதிகளில் ஆரஞ்சு அலர்ட்: இந்திய வானிலை ஆய்வு மையம்

கோப்புப் படம் |
கோப்புப் படம் |
Updated on
1 min read

சென்னை: தமிழகத்திற்கு 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை இன்று தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே தெரிவித்து இருந்தது. இந்நிலையில் தமிழகத்திற்கு 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி அக்டோபர் 29 மற்றும் அக்டோபர் 30 ஆம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும் அக்டோபர் 31, நவம்பர் 1 மற்றும் நவம்பர் 2 ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நவம்பர் 1 மற்றும் 2 ஆம் தேதி தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in