வீரமாமுனிவர் பிறந்த தினம்: தமிழக அமைச்சர்கள் மரியாதை

வீரமாமுனிவர் பிறந்த தினம்: தமிழக அமைச்சர்கள் மரியாதை
Updated on
1 min read

வீரமாமுனிவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் அமைச்சர்களும் அதிகாரிகளும் அவரது உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இத்தாலியில் பிறந்து தமிழகம் வந்து தமிழ் வளர்த்த வீரமாமுனிவரின் பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

தமிழக அரசு சார்பில், காமராஜர் சாலையில் உள்ள அவரது சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப் பட்ட, உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தப் பட்டது.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார் (மீன்வளம்), கடம்பூர் ராஜூ (செய்தித்துறை), கே.பாண்டியராஜன் (பள்ளிக்கல்வி), பி.பெஞ்சமின் (ஊரக தொழில்துறை) பங்கேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும், இதில், செய்தித்துறை செயலர் இரா.வெங்கடேசன், இயக்குநர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் இயக்குநர் எஸ்.பி.எழிலழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in