

சிதம்பரத்தை அடுத்த பரங்கிப் பேட்டை அருகே கரிக்குப்பத்தில் தனியார் அனல்மின் நிலைய கட்டுமானப் பணியில் சனிக் கிழமை ஏற்பட்ட விபத்தில் பிஹாரைச் சேர்ந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டை அருகே கரிக்குப்பம் எனும் கிராமத்தில் தனியார் அனல்மின் நிலையக் கட்டுமானப்பணி நடைபெறுகிறது. இந்த பணியில் பிஹார் மற்றும் ஆந்திர மாநிலங் களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டவ ர்கள் ஈடுபட்டுள் ளனர். அனல்மின் நிலைய புகை போக்கி கோபுர பணியில் பிஹாரைச் சேர்ந்த முன்னா சவுத்திரி மகன் சோனுராஜ் சவுத்திரி (26), சலாவுதீன்கான் மகன் முகித்கான் (31) மற்றும் வினோத்குமார் ஆகியோர் சுமார் 230 மீ உயர லிப்டில் நின்றபடி வேலை செய்தனர். அப்போது, திடீரென ரோப் அறுந்து மூவரும் கீழே விழுந்தனர். இதில் சோனுராஜ் சவுத்ரி மற்றும் முகித்கான் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். கால் துண்டிக்கப்பட்ட நிலையில் படுகாயங்களுடன் வினோத்குமார் கிடந்தார். அவரை கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.
போலீஸ் தடியடி
இதற்கிடையே, தொழிலா ளர்கள் நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த பரங்கிப்பேட்டை போலீஸார் தொழிலாளர்களை அப்புறப்படுத்த முயன்றபோது போலீஸாருக்கும் தொழிலாளர் களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீஸார் மீது தொழிலாளர்கள் கல்வீசி தாக்கி யதில் பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார், சிதம்பரம் நகர இன்ஸ்பெக்டர் அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் ஆகியோருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. போராட்டம் நடத்தி யவர்களை தடியடி நடத்தி போலீஸார் கலைத்தனர்.
ரூ.8 லட்சம் நிவாரணம்
விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தனியார் அனல் மின் நிலையம் தலா ரூ.8 லட்சம் நிவாரணம் வழங்கி யுள்ளதாகவும், இறந்தவர்களின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லும் செலவையும் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.
தொழிலாளி வினோத் குமாரை கடலூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மருத்துவர் வராததானல் முதலுதவி கூட செய்யப்படாமல் புதுச்சேரி மருத்துவமனைக்கு அவரை கொண்டு செல்லுமாறு பரிந்துரைத் ததாக கடலூர் மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு குற்றஞ் சாட்டியுள்ளது.