கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்து
கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்து

கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்து | பலியான 7 பேரில் மூவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 

Published on

உத்தரகாண்ட்: கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் பலியானவர்களில் 3 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத் அருகே இன்று காலை ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் உயிரிழந்த 7 பேரில் இருவர் விமானிகள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விபத்துக்கு இரங்கல் தெரிவித்த அம்மாநில அரசு, மீட்புப்பணிகளை விரைவாக மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விபத்து குறித்து அறிக்கை ஒனறு தற்போது வெளியாகியுள்ளது. விபத்தில் உயிரிழந்த 7 பேரின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 3 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களில் பிரேம்குமார், கலா, சுஜாதா ஆகியோர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து மூவரும் கேதார்நாத்திற்கு சென்ற பக்தர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் பலியான சம்பவத்திற்கு, பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in