எஸ்எஸ்எல்சி துணை தேர்வு மறுகூட்டல் முடிவு: இன்று வெளியீடு

எஸ்எஸ்எல்சி துணை தேர்வு மறுகூட்டல் முடிவு: இன்று வெளியீடு
Updated on
1 min read

எஸ்எஸ்எல்சி துணை பொதுத் தேர்வில் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து, மதிப் பெண் மாற்றம் உள்ளவர்களின் பட்டியல் இன்று காலை வெளியிடப்படுகிறது.

எஸ்எஸ்எல்சி துணை பொதுத்தேர்வு கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடந்தது. 27,397 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 227 பேர் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தனர். அதில், மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களின் பதிவெண் பட்டியல் அரசு தேர்வுத் துறை இணையதளத்தில் (www.tndge.in) இன்று (25-ம் தேதி) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.

மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களுக்கு புதிய மதிப்பெண் பதிவு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து இப்பட்டியலில் இடம்பெறாத மாணவர்களின் மதிப்பெண்ணில் எவ்வித மாற்றமும் இல்லை. இத்தகவலை அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in