Published : 17 Oct 2022 06:20 AM
Last Updated : 17 Oct 2022 06:20 AM
சென்னை: வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தமிழக ஆளுநர், அரசியல் தலைவர்கள் அவருக்கு புகழஞ்சலி செலுத்தினர்.
இது தொடர்பாக அவர்கள் தெரிவித்ததாவது: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி: ஆங்கிலேயரை எதிர்த்து சுதந்திரத்துக்காக போராடிய துணிச்சலான ராணுவ தளபதி மற்றும் திறமையான நிர்வாகி வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாளில் அவரது புகழை போற்றுவோம்.
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: ஆங்கிலேயரின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, வரி செலுத்த மறுத்து, தாய் மண்ணை காக்க இறுதி மூச்சுவரை போராடி, அனைவரது நெஞ்சங்களில் விடுதலை வேட்கையை ஆழமாக பதித்து, வீரத்துக்கு இலக்கணமாய் விளங்கியவர்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: ஆங்கிலேயரின் அடக்குமுறையை எதிர்த்து வரிசெலுத்த மறுத்ததோடு, அந்நியருக்கு காவடி தூக்குவதைவிட தூக்குக்கயிறே மேல் என தூக்கு மேடை ஏறியபோதும் தூக்கு கயிற்றை முத்தமிட்டு, வீரத்துக்கு இலக்கணமாய் திகழ்ந்த மாவீரர்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை: ஆங்கிலேயர்களின் அடக்குமுறை மற்றும் ஆதிக்கத்தை எதிர்த்து போரிட்டவர். அடிமையாய் வாழ்வதைவிட வீரனாய் சாவதே மேல் என்று நாட்டைக் காக்க போராடிய வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினத்தில் அவரது வீரத்தையும், சுதந்திர வேட்கையையும் போற்றி வணங்குவோம்.
டிடிவி தினகரன்: நாட்டின் விடுதலைப் போரில் தனி இடம் பெற்றவரும், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக உறுதியோடு போரிட்டவரும், சுதந்திரத்துக்காக தன் உயிரையே விலையாக கொடுத்தவருமான வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாளில் அவரது வீரத்தையும், தியாகத்தையும் போற்றிடுவோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT