‘விடியல் பயணம்’ திட்டத்தில் 881 கோடி முறை பெண்கள் பயணம்: பட்ஜெட்டில் தகவல்

‘விடியல் பயணம்’ திட்டத்தில் 881 கோடி முறை பெண்கள் பயணம்: பட்ஜெட்டில் தகவல்
Updated on
1 min read

மகளிர் உரிமைத் தொகை திட்​டம் மூலம் 1.31 கோடி பெண்​களுக்கு மாதம் ரூ.1.000 வழங்​கப்​பட்டு வரு​கிறது. இதன் பலனை உணர்ந்து மற்ற மாநிலங்​களும் இத்​திட்​டத்தை பின்​பற்​றத் தொடங்​கி​யுள்​ளன. சமீபத்​தில் கோடை​காலச் சிறப்​புத் தொகை​யுடன் சேர்த்து ரூ.5000 வங்​கிக் கணக்​கில் வரவு வைக்​கப்​பட்​டதை பெண்​கள் மகிழ்ச்​சி​யுடன் கொண்​டாடினர். ‘விடியல் பயணம்’ திட்​டத்​தின் மூலம் இது​வரை 881 கோடி முறை பேருந்​துகளில் பெண்​கள் கட்​ட​ணமின்றி பயணித்​துள்​ளனர். இதனால் மாதம் ஒன்​றுக்கு சராசரி​யாக ரூ.888 வரை பெண்​களால் சேமிக்க முடிகிறது.

இத்​தகைய பல்​வேறு முயற்​சிகள் காரண​மாக தொழிற்​சாலை​களில் பணி​புரி​யும் பெண்​களில் 41 சதவீதம் பேர் தமி​ழ​கத்​தைச் சேர்ந்​தவர்​கள் என்ற பெரு​மையை நாம் அடைந்​துள்​ளோம். இதுத​விர பெண்​கள் பெயரில் சொத்து வாங்​கு​வதை ஊக்​குவிக்​கும் வகை​யில், கடந்​தாண்டு ஏப்​ரல் முதல் சொத்து பதிவுக் கட்​ட​ணம் மகளிருக்கு 1 சதவீதம் குறைக்​கப்​பட்​டுள்​ளது. இதன்​மூலம் 3.71 லட்​சம் பேர் பயனடைந்​துள்​ளனர். திருநங்​கை​கள் சுய​மாகத் தொழில் செய்​வதை ஊக்​குவிக்க இந்த அரசு மானி​யம் வழங்​கு​கிறது. இவ்​வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப்​பட்​டுள்​ளது.

32 விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற அரசு நடவடிக்கை

தமி​ழ​கத்​தின் தனித்​து​வ​மான விளைபொருட்​களுக்கு புவி​சார் குறி​யீடு பெறும் வகை​யில், 9 விளைபொருட்​களுக்கு புவி​சார் குறி​யீடு பெறப்​பட்​டுள்​ளது. மீத​முள்ள 32 விளைபொருட்​களுக்கு புவி​சார் குறி​யீடு பெற தொடர் நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ள​தாக வேளாண் இடைக்​கால பட்​ஜெட்​டில் தெரிவிக்​கப்​பட்​டது.

இதுகுறித்து பட்ஜெட் உரையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 5 ஆண்​டு​களில் தனித்​து​வ​மான விளைபொருட்​களுக்கு புவி​சார் குறி​யீடு பெறு​வதற்​கான நடவடிக்​கை​கள் மேற்​கொள்​ளப்​பட்​டு, இது​வரை 41 விளைபொருட்​களுக்கு விண்​ணப்​பிக்​கப்​பட்​டன. இதில், சோழ​வந்​தான் வெற்​றிலை, பண்​ருட்டி பலாப்​பழம், பண்​ருட்டி முந்​திரி, விருதுநகர் சம்பா வத்​தல், ராம​நாத​புரம் சித்​திரைக்​கார் அரிசி, புளி​யங்​குடி எலுமிச்​சை, செட்​டிக்​குளம் சின்ன வெங்​கா​யம், தூயமல்லி அரிசி, கவுந்​தப்​பாடி நாட்​டுச் சர்க்​கரை ஆகிய 9 விளைபொருட்​களுக்கு புவி​சார் குறி​யீடு பெறப்​பட்​டுள்​ளது. மீத​முள்ள 32 விளைபொருட்​களுக்கு புவி​சார் குறி​யீடு பெற தொடர் நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

‘விடியல் பயணம்’ திட்டத்தில் 881 கோடி முறை பெண்கள் பயணம்: பட்ஜெட்டில் தகவல்
சட்டப்பேரவையில் ரூ.3.44 லட்சம் கோடிக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in