புலிகள் அமைப்புடன் தொடர்பா? - சிவகங்கையில் என்ஐஏ விசாரணை

சிவகங்கை கல்லூரி சாலையில் உள்ள விக்னேஸ்வரன் வீட்டில் விசாரணை செய்துவிட்டு வெளியே வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள்.
சிவகங்கை கல்லூரி சாலையில் உள்ள விக்னேஸ்வரன் வீட்டில் விசாரணை செய்துவிட்டு வெளியே வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள்.
Updated on
1 min read

சிவகங்கை: சிவகங்கை இளைஞருக்கு விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பு உள்ளதா? என தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்ஐஏ) விசாரணை நடத்தினர்.சிவகங்கை கல்லூரி சாலையைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (27). இவர் சென்னையில் கார் ஓட்டுநராக உள்ளார். இவர் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் சிவகங்கையில் உள்ள அவரது வீட்டுக்கு நேற்று அதிகாலை சென்ற அதிகாரிகள் வீட்டில் விக்னேஸ்வரன் இல்லாததால் அவரது பெற்றோரிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். சிவகங்கை கல்லூரி சாலையில் உள்ள விக்னேஸ்வரன் வீட்டில் விசாரணை செய்துவிட்டு வெளியே வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in