சென்னை - குண்டூர் வழித்தடத்தில் 143 கி.மீ வேகத்தில் சீறிப் பாய்ந்த ரயில் 

சோதனை ஓட்டத்தை ஆய்வு செய்த அதிகாரிகள்
சோதனை ஓட்டத்தை ஆய்வு செய்த அதிகாரிகள்
Updated on
1 min read

சென்னை: சென்னை - குண்டூர் வழித்தடத்தில் அதிகவேக சோதனை ஓட்டத்தில் 143 கி.மீ வேகத்தில் ரயில் இயக்கப்பட்டது.

அதிக பயணிகள் பயணம் செய்யும் வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்களில் வேகத்தை அதிகரிக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்தது. இதன்படி சென்னை - குண்டூர் வழித்தடத்தில் அனுமதி அளிக்கப்பட்ட உட்சபட்ச வேகத்தில் ரயில்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதன்படி, இந்த வழித்தடத்தில் மணிக்கு 110 முதல் 130 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டது.

இது தொடர்பான சோதனை ஓட்டம் இன்று (அக்.6) நடைபெற்றது. இந்த சோதனை ஓட்டத்தில் அதிகபட்சமாக ரூ.143 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் இயக்கப்பட்டது. இதன்படி 134 கிலோ மீட்டர் தூரத்தை 84 நிமிடத்தில் ரயில் கடந்து சென்றது. இதனைத் தொடர்ந்து பல்வேறு சோதனைகளுக்கு இந்த வழித்தடத்தில் அதி வேகத்தில் ரயில்களை இயக்க அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in