

சென்னை மாநகராட்சியில் வரி களை காசோலையாகவோ, வரை வோலையாகவோ மட்டுமே பெறப் பட்டு வருகிறது. மத்திய அரசு பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்துள்ள நிலையில், மக்கள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலுத்த வேண் டிய வரியை பழைய நோட்டுக ளாக வாங்கலாம் என அறிவுறுத் தியிருந்தது.
அதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி சார்பில் வரியை பழைய நோட்டுகளாக செலுத்தும் முகாம் நடத்தப்படு கிறது. இதில் நேற்று மட்டும் ரூ.5 கோடியே 32 லட்சம் வசூலிக்கப் பட்டது. கடந்த 6 நாட்களில் ரூ.42 கோடியே 93 லட்சம் வசூலானது.