

சென்னை: சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோரயில் திட்டத்தில், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வழித்தடத்தில் பாதைகள், சுரங்க ரயில் நிலையங்கள் அமைப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.
சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்தின் கீழ், ரூ.63,246 கோடி மதிப்பில் 118.9 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் பணிகள் நடைபெறுகின்றன. மாதவரம் - சிப்காட் சிறுசேரி வரை (3-வது வழித்தடம்) 45.8 கி.மீ. தூரத்துக்கும், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பைபாஸ் வரை (4-வது வழித்தடம்) 26.1 கி.மீ. தூரத்துக்கும், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை (5-வது வழித்தடம்) 47 கி.மீ. தூரத்துக்கும் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. இதில், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பைபாஸ் வழித்தடத்தில் 16 கி.மீ. தூரம் உயர்மட்ட பாதையாகவும், 10.1 கி.மீ. தூரம்சுரங்கப் பாதையாகவும் அமைகிறது. உயர்மட்டத்தில் 18, சுரங்கப்பாதையில் 12 என மொத்தம் 30 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைகின்றன. இந்த வழித்தடத்தில் முன்னுரிமை அடிப்படையில் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: 2-ம் கட்டமெட்ரோ ரயில் திட்டத்தில் மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை3-வது வழித்தடத்தில் சுரங்கம்தோண்டும் இயந்திரம் மூலமாக, சுரங்கப்பாதை அமைக்கும் பணிஇம்மாதம் தொடங்க உள்ளது.இத்தடத்தில் சுரங்க ரயில்நிலையங்கள் அமைக்கும் பணியும்தொடங்கப்பட்டுள்ளது. காந்தி சிலையில் இருந்து ராணிமேரி கல்லூரி வரை கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் தடுப்புகள் அமைத்து பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கலங்கரை விளக்கம், பட்டினப்பாக்கம், கச்சேரி சாலை, மயிலாப்பூர், அடையாறுகேட், நந்தனம், நடேசன் பூங்கா, பனகல் பூங்கா, கோடம்பாக்கத்தில் சுரங்கம் தோண்டி மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி நடந்துவருகிறது. இப்பகுதிகளில் உள்ள குடியிருப்பகளுக்கு பாதிப்புஏற்படாத வகையில், பலகட்டசோதனைகளுக்கு பிறகு, பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.