அருப்புக்கோட்டை நகராட்சி ஆணையர் தற்கொலை
விருதுநகர் மாவட்டம், அருப்புக் கோட்டை நகராட்சி ஆணையர் முத்து வெங்கடேஸ்வரன்(52) நேற்று வீட்டுக்குள் மர்மமான முறையில் தூக்கிட்ட நிலையில் இறந்துகிடந்தார்.
அருப்புக்கோட்டை நகராட்சி ஆணையர் முத்து வெங்கடேஸ் வரன். சென்னையில் உதவி ஆணையராகப் பணிபுரிந்த அவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஆணையராக பதவி உயர்வு பெற்று திருத்தங்கல் நகராட்சியில் பணிபுரிந்து வந்தார். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் அருப்புக்கோட்டை நகராட்சி ஆணையராக மாற்றப்பட்டார். இவரது மனைவி லதா(46), மகன் சாய்கிருஷ்ண காந்த்(12) ஆகியோர் சென்னையில் வசித்து வருகின்றனர். எனவே, முத்து வெங்கடேஸ்வரன் மட்டும் அருப்புக்கோட்டையில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்தார்.
நேற்று காலை அலுவலகத் துக்கு வராததால் சந்தேகமடைந்த ஊழியர்கள், அவரது வீட்டின் ஜன்னலைத் திறந்து பார்த்தனர். அப்போது தூக்கிட்டு இறந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது.
சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் மற்றும் நகராட்சி அலுவலர்கள் கதவை உடைத்து அவரது சடலத்தை மீட்டனர். பிரேதப் பரிசோதனைக்காக அவரது உடல் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.
நகராட்சிப் பணிகள் டெண்டர் விடப்பட்டது தொடர்பாக இவர் மீது பல்வேறு புகார்கள் தெரிவிக் கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், அரசியல் நெருக்கடிகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
