அனைத்து இடங்களிலும் தமிழை பயன்படுத்துங்கள்! - ஹிப் ஹாப் தமிழா ஆதி வேண்டுகோள்

அனைத்து இடங்களிலும் தமிழை பயன்படுத்துங்கள்! - ஹிப் ஹாப் தமிழா ஆதி வேண்டுகோள்
Updated on
1 min read

இசையமைப்பாளரும், நடிகரும், இயக்குநருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி, அகழாய்வு குறித்து தனது ‘தமிழன்டா’ அமைப்பு உருவாக்கிய ‘பொருநை’ ஆவணப் படத்தின் டிரெய்லரை, ‘யாதும் தமிழே’ விழாவில் வெளியிட்டார். அவர் பேசியதாவது: தமிழில் பேசுவது கெத்து என்ற மனநிலை வருவதற்கு என் தமிழ் ஆசிரியைதான் காரணம். திரைப்படத்தில் எப்படி இருந்தாலும் சரி, ‘தமிழன்டா’ இயக்கத்தில் சரியான தகவல்களை மட்டுமே எடுத்துக் கூற வேண்டும் என முடிவு செய்து முயற்சித்து வருகிறோம்.

ஓராண்டு காலம் ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணிகளை உடன் இருந்து ஆவணப் படமாக்கி ‘பொருநை’ எனும் பெயரில் வெளியிட உள்ளோம். இதன்மூலம் அகழாய்வு படிக்கும் எண்ணம் மாணவர்களிடம் மேலோங்கும் என நம்புகிறேன். புதியன நோக்கிச் செல்ல வேண்டுமானால் நம்மிடம் பழமை நிச்சயம் இருக்க வேண்டும். இந்த ‘பொருநை’க்கும் அனைவரும் ஆதரவு தர வேண்டும். இதற்கு உறுதுணையாக இருந்த தொல்லியல் துறைக்கு நன்றி. தமிழ் சமூகம் அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டுமானால், இயன்றவரை அனைத்து இடங்களிலும் தமிழை பயன்படுத்துங்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in