வானிலை முன்னறிவிப்பு | தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

வானிலை முன்னறிவிப்பு | தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை மண்டல இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கை:

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்றும் (செப்.25), நாளையும் (செப்.26) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானமழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 96.8 முதல் 98.6 டிகிரி பாரன்ஹீட் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 80.6 முதல் 82.4 டிகிரி பாரன்ஹீட் அளவில் இருக்கக்கூடும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in