அக்.23-ல் பயணிக்க பேருந்து முன்பதிவு இன்று தொடக்கம்

அக்.23-ல் பயணிக்க பேருந்து முன்பதிவு இன்று தொடக்கம்
Updated on
1 min read

சென்னை: தீபாவளி பண்டிகை அக்.24-ம் தேதி (திங்கள்) கொண்டாடப்படுகிறது. இதற்கு முந்தைய 2 நாட்களும் (சனி, ஞாயிறு) வார இறுதி விடுமுறை நாட்கள் என்பதால் வெளியூரில் தங்கியிருக்கும் மாணவர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பெரும்பாலானோர் அக்.21-ம் தேதி (வெள்ளி) இரவே தங்களது ஊர்களுக்குப் புறப்படத் தொடங்கிவிடுவர்.

அதன்படி அக்.21-ம் தேதி பயணிப்போருக்கான முன்பதிவு நேற்று முன்தினம் தொடங்கியது.

இந்நிலையில், தீபாவளிக்கு முன்தினம் புறப்பட்டுச் செல்லும் பயணிகள் இன்று (செப்.23) முதல் பயணச்சீட்டை முன்பதிவு செய்யலாம் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர். tnstc.in என்ற இணையதளம், tnstc செயலி மற்றும் முன்பதிவு மையங்கள் வாயிலாக பயணச்சீட்டை முன்பதிவு செய்யலாம் என அவர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in