Published : 22 Sep 2022 04:10 AM
Last Updated : 22 Sep 2022 04:10 AM
மாணவர்களுக்கு வரும் காய்ச்சல் 3 நாட்களில் சரியாகிவிடுகிறது.மேலும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படாது என்று அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அவர் பின்னர், 1955-ல் தொடங்கப்பட்ட ராமேசுவரம் அரசு மேல்நிலைபள்ளியில் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியதாவது: குழந்தைகளுக்கு வரும் காய்ச்சல் 3 நாட்களுக்கு மட்டுமே இருக்கும் என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய அவசியமில்லை.
சுகாதாரத் துறை தெரிவிக்கும் வழிமுறைகளைப் பின்பற்றி பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாணவர்களுக்கு காய்ச்சல் பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம்.
பள்ளிகளில் ‘மாணவர் மனசு’ என்ற பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அந்த பெட்டியில் மாணவர்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், இலவச அழைப்பு எண் 14417-ல் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT