குவைத்தில் மரணம் அடைந்த முத்துக்குமரன் உடல் நாளை தமிழகம் வர வாய்ப்பு

முத்துக்குமரன் | கோப்புப் படம்
முத்துக்குமரன் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: குவைத்தில் மரணம் அடைந்த முத்துக்குமரன் உடல் நாளை தமிழகம் கொண்டுவரப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் லட்சுமண்குடி கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமரன். இவர் குடும்ப கஷ்டம் காரணமாக வெளிநாடு சென்று பணிபுரிய முடிவு செய்து கடந்த 3-ம் தேதி குவைத் சென்றுள்ளார். இந்நிலையில், கடந்த 9-ம் தேதி குவைத்தில் முத்துக்குமரன் மரணமடைந்துவிட்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

முத்துக்குமரணம் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் கூறிய கூத்தாநல்லூர் வர்த்தக சங்கத்தினர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் கண்டன பேரணி நடத்தி கூத்தாநல்லூர் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர். மேலும், முத்துக்குமரனம் உடலை மீட்டு இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது மனைவி வித்யா கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில், அவரது உடல் நாளை தமிழகம் கொண்டு வரப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in